ஸ்லாமாபாத்

ந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து பாகிஸ்தான் அரசு ஹஃபீஸ் சையத்தை மீண்டும் கைது ச்ய்துள்ளது.

இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான லஷ்கர் ஈ தொய்பாவின் தலைவன் ஹஃபீஸ் சையத்.  மும்பையில் 26/11/2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு மூளையாக இருந்தவர் இவர் தான்.  ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச பயங்கரவாதியாகவும் அறிவிக்கப் பட்டுள்ளார்.  ஜனவரி மாதம் 31ஆம் தேதியில் இருந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட ஹஃபீஸ் சையத் கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டார்.

ஹஃபீஸ் சையத்தின் விடுதலைக்கு இந்தியா, அமெரிக்க உட்பட பல நாடுகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்தன.  அவரை மீண்டும் கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் பாக் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.  இந்திய அரசும் அவரை மீண்டும் கைது செய்ய வற்புறுத்தியது.  அதைத் தொடர்ந்து ஹஃபீஸ் சையத் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.