வேலூரில் ஆலங்கட்டி மழை: மக்கள் மகிழ்ச்சி

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகலில் திடீரென ஆலங்கட்டி மழை கொட்டித்தீர்த்தது. கடந்த 1 வார காலமாக பகலில் வெயில் சுட்டெரித்தாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வது வாடிக்கையாக உள்ள நிலையில், இன்று பெய்த ஆலங்கட்டி மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி