உலக மக்கள் தொகையான ஏழு பில்லியன் மக்களுக்கும் உணவளிக்க போதுமான அளவு உணவு உற்பத்தி உலகில் தயாரிக்கப்படுகின்றது.இருப்பினும், இன்னும் ஒன்பதில் ஒரு நபர் பட்டினி கிடக்க நேரிடுகின்றது.
ஹைட்டி, வட அமெரிக்காவில் உள்ள ஒரு கரீபியன் நாடாகும். ஹிஸ்பனியோல் தீவில் அமைந்துள்ள ஹைட்டிக்கு கிழக்கே டோமினிகன் குடியரசு உள்ளது.
ஹைட்டி மேலை உலகிலேயே மிக வறிய நாடுகளில் ஒன்று. இங்கு 2010 ஏற்பட்ட பூகம்பத்தால் பஞ்சம் நிலவி வருகின்றது. அம்மக்கள் வறுமையில் வாடிவருகின்றனர்.

உலகின் எல்லா மனிதர்களின் பசியைத் தீர்க்கக் கூடிய அளவு உலகில் உணவு உற்பத்தி நடைப்பெற்றாலும் , ஒன்பதில் ஒருவர் பட்டினியுடன் உறங்கச் செல்லும் சூழ்நிலை நிலவுகின்றது.

கீழே உள்ள காணொளியில், ஹைட்டியர்கள் மண் தட்டுகள் செய்கின்றனர்.
இதில் என்ன இருக்கின்றது என நினைக்கின்றீர்களா ?
நீங்கள் நினைப்பது போல் ஹைட்டியர்கள் மண் தட்டு செய்வது அதில் உணவை வைத்துச் சாப்பிட அல்ல. அதனையே உணவாய் சாப்பிட. ஆம். பாருங்கள் காணொளியை:

சில குறிப்புகள்:
உலகில் தயாரிக்கப்படும் உண்வு உற்பத்தியில் சுமார் மூன்றில் ஒருபங்கு உணவு, 1.3 பில்லியன் டன் வீணாக்கப்படுகின்றது

பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் தயாரிக்கப்படும் உணவிற்கு சமமான உணவு , ஒவ்வொரு வருடமும் வீணாக்கப்படுகின்றது.

பெரும்பான்மையாக வீணடிக்கப்படும் உணவில் ” பழங்களும், காய்கறிகளும் அடங்கும்.- ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயக் குழு.

இந்தியா , பங்களாதேஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பட்டினி இன்னும் பல உயிர்களைல் காவுவாங்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

 
அவசியம் படிக்க: உணவு வீணாவதற்கு காரணம் யார் ? உலக பொருளாதாரக் கொள்கைகளா? தனிநபர் அலட்சியமா?
 
 
நன்றி: இந்தியாடுடே