சின்னாபின்னமானது ஹெயிட்டி நாடு! 220 கீ.மீ. வேகத்தில் மேத்யூ சூறாவளி!

ss-161004-hurricane-matthew-hispaniola-01_2dc9325e61319c85222a1f78b4cb48b8-nbcnews-ux-1024-900

போர்ட்-ஓ-பிரின்ஸ்:

ஹெயிட்டி நாட்டில் கடுமையான புயல் வீசியதால், அந்த நாடே சின்னாபின்னமானது.

அமெரிக்கா அருகில் கரீபியன் தீவுப்பகுதியில் அமைந்துள்ள நாடு ஏழை நாடு ஹெயிட்டி. இங்கு நேற்று கடுமையான புயல் தாக்கியது. மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் வீசிய மேத்யூ சூறாவளியால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மரங்கள் வேரோடு பெயர்ந்து சாய்ந்தன.  பயிர்கள் எல்லாம் அழிந்துவிட்டன. மக்கள்,  உணவோ, ஒதுங்கவும் இடமோ இன்றி தவிக்கிறார்கள்.

அமைவிடம்
அமைவிடம்

பலியானோர் விவரம், பொருட்களின் இழப்பு குறித்த விவரங்கள் தெரியவில்லை.

“ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் ஹெயிட்டியை கடும் பூகம்பம் தாக்கியது. அதன் பிறகு நடக்கும் பெரும் இயற்கை பேரிடர் இதுதான்” என்று ஹெயிட்டிஉள்ள ஐநா மன்ற அலுவலரான மூரட் வஹ்பா தெரிவித்தார்.

ஹெயிட்டியை சின்னாபின்னமாக்கிய மேத்யூ சூறாவளி இப்போது கியூபாவை நோக்கி சென்றுவிட்டது. ஆனால் அதன் தாக்கம் குறைந்துவிட்டதால் கியூபாவுக்கு பெரும் ஆபத்து இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.