ஹஜ் யாத்திரை: மெக்கா நகரில் குவியும் இஸ்லாமியர்கள்!

மெக்கா:

வாழ்வில் ஒரு முறையேனும் புனித மக்கா சென்று ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும் என்பது இஸ்லாமிய சமுகத்திவர்களின் சமயக் கடமை. ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளில் இருந்து இஸ்லாமியர்கள் புனித பயணம் சென்றுவருகின்றனர்.

இந்த ஆண்டு உலகம் முழுவதும் இருந்து ஹஜ் பயணத்தை மேற்கொண்டுள்ள இஸ்லாமியர்களில் ஒன்றரை லட்சம் பேர் மெக்கா நகரை சென்றடைந்துள்ளனர். இன்னும்  நாட்களில் அந்த எண்ணிக்கை பல மடங்கு உயரக்கூடும் என நம்பப்படுகிறது.

1haj

பயணிகள் கூட்டம் காரணமாக  விபத்து எதுவும் நிகழாமல் இருக்கும் பொறுட்டு சவுதி அரசு பல்வேறு கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எதிர்பாரா விளைவுகளைத் தவிர்க்கும் நோக்கில் புனிதப் பயணிகள் அனைவருக்கும் எலக்ட்ரானிக் கைப்பட்டை வழங்கப்பட்டுள்ளது. அதை கையில் அணிந்து கொண்டால் கூட்டம் அதிகமுள்ள இடங்களை அறிந்து புனிதப் பயணிகள் தங்கள் பயணத் திட்டத்தை அதற்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ள உதவும்.

புனித மெக்காவில் மட்டும் 800க்கும் அதிகமான சுற்றுப்புறக் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மெக்கா வரும் புனித பயணிகள் இங்கு வந்து சேர்ந்ததிலிருந்து, கடமைகளை முடித்துவிட்டுத் திரும்பும்வரை அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தவிதச் சமரசமும் செய்யப்படமாட்டாது என்று மேஜர் ஜெனரல் முகம்மது அல் அஹ்மதி கூறினார்.