ரஜினிக்கு மிரட்டல்: புதிய படத்தின் கதை மாறுகிறது?

னுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்க இருக்கிறார். மும்பமையில் தாதாவாக கோலோச்சிய ஹாஜிமஸ்தான் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதில் ஹாஜி அலி மஸ்தானாக ரஜினி நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மும்பை ‘தாதா’ ஹாஜி அலிமஸ்தானின் வளர்ப்பு மகன்  சுந்தர் ஷேகர், ரஜினிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார்.

ரஜினி ( உள்படம்) சுந்தர் ஷேகர்

அக் கடிதத்தில், “என்னுடைய வளர்ப்புத் தந்தை, ஹாஜி அலிமஸ்தான் ‘பாரதிய மைனாரிட்டி சுரக்‌ஷா மஹாசங்’ என்ற கட்சியை நிறுவியவர். இயக்குநர் ரஞ்சித், உங்களை வைத்து எடுக்கிற படத்தில் என்னுடைய தந்தையை மும்பையின் கள்ளக் கடத்தல் தலைவனாகவும், நிழல் உலக தாதாவாகவும் சித்தரித்து இந்த படம் எடுக்கப்பட உள்ளதாக  ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

இது வேண்டாத வீண் வேலை. என் தந்தை மீது குற்றச் செயலுக்காக எந்த கோர்ட்டும் தண்டனை அளிக்கவில்லை. தேவையில்லாமல் என் தந்தை பெயரை நீங்கள் இழிவாக சித்தரித்து படத்தில் காட்சிப்படுத்தினால், அதன் பின் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும். என் கட்சித் தொண்டர்கள் சும்மா இருக்கமாட்டார்கள்.

 

நாங்கள் தமிழகத்திருந்து வந்தவர்கள் தான். நான் சிறுவனாக இருக்கும் போது என்னை தத்தெடுத்து வளர்த்து வந்தவர் அவர். என்னை, அவரது சொந்த மகன் போல் வளர்த்தார். ஆனால், என்னை மதம் மாறச் சொல்லவில்லை. அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க வேண்மென்றால் அவரது வாழ்க்கை கதையை நான் தருகிறேன். அவரது வாழ்க்கை படத்தை தயாரிக்க நான் ஆவலாக இருக்கிறேன். நான் இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் புரோடியூசர் அசோசியேசனில் வாழ்நாள் உறுப்பினராக இருக்கிறேன்.

ஹாஜி மஸ்தான் பின்னால் ஒரு பெரிய படையே இருக்கிறது. தமிழகத்தில் கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பாக கோபத்தில் இருக்கிறார்கள். தொடர்ந்து ஹாஜி மஸ்தான் மிர்சாவை கடத்தல் மன்னன் என்றும் நிழல் உலக தாதா என்றும் கூறி படம் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்”  என்று அவரது வளர்ப்பு மகன் சுந்தர் ஷேகர் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் வீட்டு முகவரிக்கு  இக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் நேற்று இரவு, பா.ரஞ்சித்துடன் ரஜினி பேசியிருக்கிறார்.  படத்தின் கதையை மாற்றலாமா என்று இருவரும் விவாதித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

“இந்த படத்துக்கு ஷால் ரோல்டன் இசை அமைக்க வேண்டும் என்று தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் விரும்பினார். அதை இயக்குநர் ரஞ்சித் நிராகரித்து, சந்தோஷ் நாராயணன்தான் இசை அமைக்க வேண்டும் என கூறிவிட்டார். அதே போல், படத்தில் ஒரு காட்சியிலாவது (கவுரவ தோற்றத்தில்) நடித்துவிடவேண்டும் என்று தனுஷ் விருப்பம் தெரிவித்தார். அதையும் ரஞ்சித் ஏற்கவில்லை. இதனால் இருவருக்குள்ளும் புகைச்சல் கிளம்பியிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த விவகாரம் வெடித்திருக்கிறது” என்று வருத்தப்படுகிறார்கள் படக்குழுவினர்.