இந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து… இந்திய ஹஜ் கமிட்டி அறிவிப்பு…

டெல்லி:
ந்த ஆண்டு ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. முன்பதிவு செய்துள்ளவர்கள் முழுப் பணத்தையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இதனால், பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தற்போதைய நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலக அளவில் 6,871,859 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 398,666 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொடர்ந்து பாதிப்பு ஏறிக்கொண்டே உள்ளது.  கொரோனாவுக்கு சவூதி அரேபியாவும் தப்பிக்கவில்லை. அங்கும் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால்,  அங்குள்ள புனித தலங்களான மெக்கா மற்றும் மதினா மசூதிகளும் மூடப்பட்டன. மேலும் வெளிநாட்டில் இருந்து யாத்ரிகர்கள் வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்,  இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி கூறியிருக்கிறது.
இதுதொடர்பாக ஹஜ் கமிட்டி அஸோஸிஷன் தலைவர்  அபூபக்கர் ஒரு அறிக்கையில் , இந்த ஆண்டிற்கான ஹஜ் பயண ஆயுத்த பணிகள் தொடங்குவதற்கு இன்னும் 2, 3 வாரங்களே உள்ள நிலையில், சவுதி அரேபியா அரசாங்கத்திடம் இருந்து எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கப்பெறவில்லை. இதனால், பயண ஏற்பாடுகளைகிறது.
ஹஜ் பயணம் குறித்து பலர் எ விசாரித்து  வருகின்றனர். தங்கள்  கவலைகளையும் பகிர்ந்து வருகின்றனர். எனவே ஹஜ் பயணத்திற்கு பதிவு செய்தவர்கள் தங்கள் பயணங்களை ரத்து செய்ய விரும்பினால், எந்த பிடித்தமும் இல்லாமல், செலுத்திய முழு தொகையும் வழங்கப்படும்.
இதற்காக ஹஜ் கமிட்டியின் இணையதள பக்கத்தில்  உள்ள பயண ரத்துக்கான படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும, வங்கி பரிமாற்றத்திற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்  என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி