16-வது இலகு ரக போர் விமானத்தை தயாரித்து இலக்கை எட்டிய இந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவனம்

ஐதராபாத்:

குறிப்பிட்ட காலத்துக்குள் 16-வது இலகுரக போர் விமானத்தை தயாரித்து இந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.


இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 16-வது இலகு ரக போர் விமானத்தை மார்ச் இறுதிக்குள் தயாரிப்பதன் மூலம் இலக்கை இந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவனம் எட்டியுள்ளது.

இதுதவிர, வாடிக்கையாளர்களுக்கான விமானமும் இந்த மாத இறுதிக்குள் தயாராகிவிடும்.
40 இலகு ரக போர் விமானங்களுக்கு இந்திய விமானப் படையிடமிருந்து ஆர்டர் வந்துள்ளது.
ஆண்டுக்கு 8 இலகு ரக போர் விமானங்கள் என்ற அடிப்படையில் தயாரிப்பை 2014-ம் ஆண்டு தொடங்கினோம்.

2 இலகு ரக போர் விமானங்கள் மலேசியாவில் நடக்கும் விமான கண்காட்சியில் பறக்கவிடப்படும். இந்த கண்காட்சிக்கு இந்துஸ்தான் ஏரோநேட்டிக்கல்ஸ் நிறுவனம் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.