ரஃபேல்  பேரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார்: ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் ஊழியர்கள் அம்பலம்

புதுடெல்லி:

ரஃபேல் விமானம் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய பொய் வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருப்பதாக, மத்திய அரசின் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவன ஊழியர்கள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவன ஊழியர்கள் நல அமைப்பினர் வியாழன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினர்.

ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவன ஊழியர்கள் நல அமைப்பினர் வியாழன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினர்.

அதன்பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

கடந்த 28-10-2016 அன்றுதான் ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவனத்துக்கு ‘பாதுகாப்பு அமைச்சர் விருது’ வழங்கியது. சிறந்த செயல்திறன், கண்டுபிடிப்பு,சுதேச செயல்திறனுக்காக இந்த விருதை வழங்கினர்.

ஆனால் தற்போது இந்த நிறுவனத்துக்கு எதிராக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும், மோடி அரசும் பொய் குற்றச்சாட்டுகளை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர்.

ரஃபேல் போர் விமானத்தை வடிவமைக்க ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவனத்துக்கு திறன் இல்லை என்று பொய் சொல்கின்றனர். நாட்டை தவறான கண்ணோட்டத்துக்கு திசை மாற்றும் நோக்கில் இவ்வாறு கூறியுள்ளனர்.

2018 ஜனவரி 4-ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரஃபேல் விமானம் தயாரிக்க ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவனத்துக்கு பாதுகாப்புத் துறை 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியதாக கூறியுள்ளார்.

அதேசமயம், கடந்த 7-ம் தேதி, 2014-2018 ஆண்டுகளுக்கு இடையே 26 ஆயிரத்து 570 ரூபாய்க்கு ரபேல் போர் விமானம் தயாரிக்க ஆர்டர் தரப்பட்டது என்றும் 73 ஆயிரம் கோடி ரூபாய்க்கான ஆர்டர், உத்தேச பரிந்துரை நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் எந்த அளவுக்கு பொய் பேசுகிறார் என்பதை இது வெட்ட வெளிச்சமாக்குகிறது. இது நாடாளுமன்ற உரிமை மீறல் பிரச்சினையாகும்.

ஹிந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவனம் போன்ற அரசு நிறுவனங்களை மூட நரேந்திர மோடி அரசு திட்டமிட்டு சதி செய்கிறது.
டிசால் அவியேஷன் நிறுவனத்துக்கு முன் பணமாக ரூ. 20 ஆயிரம் கோடியை மோடி அரசு கொடுத்துள்ளது. ஆனால் ஒரு விமானம் கூட சப்ளை செய்யப்பட்டவில்லை.

ஆனால், ஹந்துஸ்தான் ஏரோநேட்டிக்ஸ் நிறுவனத்துக்கு 14 ஆயிரம் கோடி செலுத்தாவிட்டாலும் கூட, விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் சப்ளை செய்திருக்கிறோம். இந்த நிலுவைத் தொகை 2019 மார்ச்சில் 20 ஆயிரம் கோடியை எட்டிவிடும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.