டில்லி

எச் ஏ எல் தொழிலாளர்கள் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் (எச் ஏ எல்) நிறுவனம் கடந்த சில நாட்களாகவே செய்திகளில் அதிகம் அடிபட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு ரஃபேல் விமானங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் அளிக்காமல் அனில் அம்பானியில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது கடும் சர்ச்சையை உண்டாக்கியது. அந்த ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் எச் ஏ எல் நிறுவனம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி உள்ளதக தகவல் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் அந்நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய்ம் அளிக்க நிதி இன்றி அரசிடம் வர வேண்டிய பாக்கித் தொகையை நிர்வாகம் கேட்டது. அடுத்தபடியாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு கொள்முதல் உத்தரவு அளித்ததாக அறிவித்தார்.

ஆனால் அவ்வளவு மதிப்புள்ள கொள்முதல் உத்தரவு வரவில்லை என நிர்வாகம் மறுத்து விட்டது. இந்நிறுவனத்தின் தொழிற்சங்க தலைவர் தற்போது இந்நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளதாக பேட்டி அளித்தார். அரசுத் துறைகளிடம் இருந்து வரவேண்டிய பாக்கி வராததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எச் ஏ எல் ஊழியர்கள் சந்திந்த்துள்ளனர். அப்போது அவர்கள் ராகுல் காந்தியிடம் தற்போது நிறுவனம் உள்ள நிலை குறித்தும் இந்த நிறுவனம் மூடப்படும் அபாயம் உள்ளதால் அதைக் காக்க வேண்டிய அவசியம் குறித்தும் கூறி உள்ளனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஊழியர்கள், ”இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் நிறுவனத்தின் மீது மத்திய அரசு அக்கறை காட்டாமல் உள்ளது. பிரதமர் மோடி மூன்று ஆண்டுகள் முன்பு கர்நாடகாவில் எலிகாப்டர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவிலை.

நாங்கள் ரஃபேல் ரக விமானங்களை தயாரிக்க எப்போதும் தயாராக உள்ளோம்/ எங்களுக்கு இவ்வகை விமானங்களை தயாரிப்பதில் எவ்வித சிரனமும் கிடையாது. எங்களிடம் அதற்கான திறமை உள்ளது. ஆயினும் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது. “ என தெரிவித்துள்ளார்.