சென்னையில் 10,11,12ம் வகுப்பு தேர்வுகள் ரத்து!!

சென்னை:

தொடர் மழை காரணமாக ​ சென்னையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,‘‘ சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை கடந்த சில தினங்களாக இடைவிடாமல் பெய்தது. இதனால், பள்ளிகளுக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

அதனால் சென்னை பள்ளிகளில் 10,11,12ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு நடக்க இருந்த முன் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. தொடர் விடுமுறை காரணமாக பாடங்களை முழுமையாக முடிக்காததால் ஆசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.