மாட்ரிட்: ஸ்பானிஷ் ஃபார்முலா-1 கார்ப்பந்தயத்தில், ‘மெர்சிடஸ்’ அணியைச் சேர்ந்த ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்று, மீண்டும் தனது வேட்டையைத் தொடங்கினார்.

பிரிட்டன் வீரரான இவர், இங்கிலாந்தில் நடைபெற்ற 70ம் ஆண்டு கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா 1 போட்டியில் இரண்டாமிடமே பெற்றிருந்தார். ஆனால், அதற்கு முந்தைய சில கிராண்ட் பிரிக்ஸ் ஃபார்முலா 1 போட்டிகளில் இவர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

இந்நிலையில், தற்போது ஸ்பானிஷ் ஃபார்முலா-1 பந்தயத்தில் சாம்பியன் ஆனதன் மூலம் மீண்டும் வெற்றிப்பா‍தைக்கு திரும்பியுள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த இவர், 307.104 கி.மீ. பந்தய தூரத்தை, 1 மணிநேரம் 31 நிமிடம் 45.279 விநாடிகளில் கடந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதேப் போட்டியில், இவர் வெல்லும் 5வது சாம்பியன் பட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.