ஹங்கேரி ஃபார்முலா 1 கார்ப்பந்தயம் – 8வது முறையாக ஹாமில்டன் சாம்பியன்!

புடாபெஸ்ட்: ஹங்கேரி ஃபார்முலா-1 கார்ப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றார் மெர்சிடஸ் அணியின் வீரர் ஹாமில்டன்.

நடப்பாண்டின் 3வது கிராண்ட்பிரிக்ஸ் ஃபார்முலா-1 கார்ப்பந்தயம் நடைபெற்றது. இதில், மொத்தம் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் பங்குபெற்றனர். பந்தய தூரம் 306.630 கி.மீ.

இதில், அத்தூரத்தை 1 மணிநேரம் 36 நிமிடங்கள் 12.473 விநாடிகளில் கடந்த மெரிசிடஸ் அணியின் பிரிட்டன் வீரர் ஹாமில்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

ஹங்கேரி கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில், இவர் வெல்லும் 8வது சாம்பியன் பட்டமாகும் இது. இதன்மூலம், ஜெர்மனி வீரர் மைக்கேல் சூமேக்கர் சாதனையை சமன் செய்தார்.

ஹாமில்டன் இதுவரை 6 முறை உலக சாம்பியன் பட்டமும், 86 முறை கிராண்ட்பிரிக்ஸ் பட்டமும் வென்றுள்ளார்.