வாஷிங்டன்:

ல்கொய்தா அமைப்பின் தற்போதைய தலைவர் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவராக பின்லேடன் இருந்து வந்த நிலையில், அவரது மறைவுக்குப் பிறகு, அந்த இயக்கத்துக்கு   ஒசாமா பின்லேடனின் 15வது மகன் ஹம்சா பின்லேடன் பொறுப்பேற்றிருந்தார். தற்போது அவரும்  கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த  பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக் கொன்றன. இதன் பின்னர் அல் கொய்தா இயக்கத்திற்கு பின் லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 31-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற விமான தாக்குதலில் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்து உள்ளார்.  ஒசாமா பின்லேடனின் 20 குழந்தைகளில் ஹம்சா பின்லேடன் 15-வது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.