ஜெர்மன் பார்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி

பெர்லின்: 

ஜெர்மனியின் ஹனாவ் நகரில் உள்ள இரு வேறு இடங்களில் உள்ள பார்களில் நடைபெற்ற  துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தென்மேற்கு ஜெர்மனியின் ஹனாவ் நகரில் உள்ள ஷிஷா பார்களில் நேற்று மர்ம கும்பல் ஒன்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி. வெவ்வேறு இடங்களில் உள்ள 2 பார்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 8 பேர் கொல்லப்பட்டதாகவும், 5 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களையும், அதற்கான காரணத்தையும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.  தாக்குதலுக்கான நோக்கம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் .