3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை: குற்றவாளியின் தூக்கு தண்டனையை நிறுத்திய சுப்ரீம்கோர்ட்

டெல்லி: 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

2018ம் ஆண்டு அக்டோபர் மாதம், குஜராத் மாநிலம் சூரத்தில் 3 வயது குழந்தையை அனில் சுரேந்திர யாதவ் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக வழக்கு பதிவானது.

இது தொடர்பான வழக்கில் அனில் சுரேந்திர யாதவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அனில் மேல்முறையீடு செய்தார்.

தனக்கான அனைத்து சட்ட நிவாரணங்களையும் முடிவடையாமல் தூக்கு தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தமது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவரது வழக்கறிஞர் அபராஜிதா சிங் கூறியதாவது: யாதவ் தனது மேல்முறையீட்டை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய 60 நாட்கள் உள்ளன, அதற்கு முன் மரண உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று வாதிட்டார்.

வாதங்களை கேட்டபின், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, அனைத்து சட்ட தீர்வுகளும் தீர்ந்துபோகும் முன் மரண உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறிய உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி, ஒரு நீதிபதி எவ்வாறு அத்தகைய உத்தரவுகளை அனுப்ப முடியும்?

நீதித்துறை இதுபோன்ற செயல்ட முடியாது என்றார். பின்னர் இந்த வழக்கை கவனத்தில் கொள்ளுமாறு தலைமை நீதிபதி போப்டே அரசாங்க வழக்கறிஞரை கேட்டுக் கொண்டார்.

ஏனெனில் குற்றவாளிகள் மரணதண்டனைக்கு முன்னர் கடைசியாக கிடைக்கக்கூடிய சட்டரீதியான விருப்பங்களைப் பயன்படுத்த ஏழு நாள் கால அவகாசத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 3 வயது சிறுமி, 3-year child, rape case, supreme court, உச்ச நீதிமன்றம், பாலியல் வழக்கு:
-=-