2050-இல் வருகிறது ஹேங்-ஓவர் தராத மதுபானம்

ஹேங்-ஓவர் தராத மதுபானம் ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். இது புது விதமான சிந்தடிக் ஆல்கஹால் ஆகும். இதற்கு “அல்கோசிந்த்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

alcosyth

டேவிட் நட் என்ற பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் கிட்டத்தட்ட 90 வகையான அல்கோசிந்த் கலவைகளை உருவாக்கி அவற்றிற்கு பேட்டண்ட் உரிமையும் வாங்கி வைத்துள்ளார். அவற்றை பரிசோதிக்கும் பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றது. ஆனாலும் அனைத்து ஆய்வுகளும் முடிந்து ஆல்கஹால் உங்கள் ஏரியா பாருக்கு வர 2050 ஆம் ஆண்டு ஆகிவிடுமாம்.

இந்த அல்கோசிந்த் மதுபானத்தை குடித்தால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாதாம். அதுமட்டுமன்றி சாதாரண மதுபானங்கள் தரும் ஹேங்-ஓவர், குமட்டல், வாய் உலர்ந்துபோதல் போன்ற எந்த தொந்தரவுகளையும் தராது என்றும் தெரியவருகிறது.