தற்போது ஜோதிகாவை வைத்து ‘ஜாக்பாட்’ என்ற படத்தை இயக்கி வரும் இயக்குனர் கல்யாண் , அதை தொடர்ந்து, சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார்.

ஹீரோயினை மையப்படுத்திய இயக்கம் இந்தப் படத்தில், ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாண் இயக்கத்தில் ஏற்கெனவே ‘குலேபகாவலி’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் ஹன்சிகா என்பது கூடுதல் தகவல்.

ஹன்சிகா நடிப்பில் வருகிற வியாழக்கிழமை (மே 9) ‘100’ படம் ரிலீஸாக இருக்கிறது. அதர்வா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை, சாம் ஆண்டன் இயக்கியுள்ளார்.இதுதவிர, ‘மஹா’ என்ற படமும் ஹன்சிகா கைவசம் உள்ளது.