தனுஷுடன் மீண்டும் இணையும் ஹன்சிகா,,

சுராஜ் இயக்கிய ‘மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் தனுஷுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்தார், ஹன்சிகா.

9 ஆண்டுகளுக்குப் பிறகு ஹன்சிகா மீண்டும் தனுஷுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார்.

மித்ரன் ஜவஹர் இயக்கும் இந்த படத்தின் கதையை தனுஷே எழுதியுள்ளார்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜனரஞ்சக பொழுதுபோக்கு படமாக இது உருவாகிறது.

ஜவஹர் மித்ரன், ஏற்கனவே தனுஷ் நடிப்பில் ‘’யாரடி நீ மோகினி’’ ‘’குட்டி’’ ‘’ உத்தமபுத்திரன்’’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

ஹன்சிகா, தனது 50 –வது படமான ‘மஹா’ படத்தின் பெரும்பாலான காட்சிகளில், நடித்து முடித்து விட்டார்.

யோகி பாபு நடிக்கும் ‘பார்ட்னர்’ படமும், ஒரு ’வெப்’ தொடரும் அவர் கைவசம் உள்ளது.

இவற்றை முடித்து விட்டு, தனுஷ் படத்தில் ஹன்சிகா நடிப்பார் எனத் தெரிகிறது.

-பா.பாரதி.