ஹன்சிகா நடிக்கும் ‘ மஹா ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘ மஹா ‘ திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஹன்சிகா சுருட்டு புகைப்பது போன்ற புகைப்படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளியாகியுள்ளது.

maha

தமிழ் திரையுலகில் எங்கேயும் காதல் எனும் திரைப்படத்திம் மூலம் ஹன்சிகா அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் மற்றும் தனுஷு என முன்னணி ஹீரோக்களுடன் ஹன்சிகா நடித்துள்ளார்.

ரசிகர்களால் விரும்பப்பட்ட ஹன்சிகாவிற்கு இடையில் அவருக்கு சினிமா வாய்ப்பு குறைய தொடங்கியது. இந்நிலையில் துப்பாக்கி முனை, மஹா மற்றும் 100 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ள ஹன்சிகா நடிப்பில் பிசியாக உள்ளார்.

maha

தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘ மஹா ‘ திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் சாமியார் வேடத்தில் ஹன்சிகா சுருட்டு புகைப்பது போன்ற ஒரு புகைப்படமும், பல முகங்களை கொண்ட ஹன்சிகாவின் காட்சி மற்றுமொரு புகைப்படமும் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த பலரும் மஹா படத்திற்கு இனி எந்த விளம்பரமும் தேவையில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கி வருகிறார். இதற்கு முன்பாக ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியர் மற்றும் போகன் உள்ளிட்ட திரைப்படத்திற்கு ஜமீல் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். கிப்ரான் இசையில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது. எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.