3,000 ஆண்டுகளாக இல்லாத வகையில் பெண் வன்கொடுமைகள் அதிகரிப்பு…ராகுல்காந்தி

டில்லி:

கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளில் நடக்காத பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மோடி ஆட்சியில் நடக்கிறது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

டில்லி தல்கோத்ரா ஸ்டேடியத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,‘‘ பெண்களுக்கு எதிராக கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளில் நடக்காத வன்கொடுமைகள் தற்போதைய மோடி ஆட்சியின் கீழ் 4 ஆண்டுகளில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த 70 ஆண்டுகளில் என்ன செய்தீர்கள்? என்று மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பீகாரில் பெண்கள் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்திலும் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் மோடி மவுனமாக உள்ளார். புல்லட் ரெயில், விமானம், கழிப்பிடம் குறித்து பேசும் மோடி, பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் நடக்கும் போது பேச மறுக்கிறார்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில்,‘‘ காங்கிரஸ் கட்சியில் 50 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து சிந்தித்து வருகிறோம். ஆனால், ஆண் ஆதிக்கம் நிறைந்த ஆர்எஸ்எஸ்.ஸை தாய் அமைப்பாக கொண்ட பாஜக இது குறித்து எவ்வித நடவடிக்கையையும் எடுக்காமல் உள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்களில் பாஜக எம்எல்ஏக்கள், தலைவர்கள் சிக்கி வருகின்றனர். முதலில் இவர்களிடம் இருந்து தான் பெண்களை பாதுகாக்க வேண்டும்.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு முழு ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. ஆனால், மோடி அந்த மசோதாவை கொண்டு வர மறுக்கிறார். காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் இது விரைந்து கொண்டு வரப்படும்’’என்றார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 000 years in India says rahul gandhi, 000 ஆண்டுகளாக இல்லாத வகையில் பெண் வன்கொடுமைகள் அதிகரிப்பு...ராகுல்காந்தி, 3, had not happened in the previous 3, happening against women during modi tenure
-=-