சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ளபடி, அரியர் தேர்வுக்கு பணம் கட்டிய மாணவர்களின், இறுதியாண்டு அரியர் தேர்வு தவிர மற்ற மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க சென்னை பல்கலைக்கழக சிண்டிக்கேட் கூட்டத்தில்தீர்மானிக்கப்பட்டு உள்ளது. விரைவில் ஒப்புதல் பெற்றவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. இது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக,  இறுதி செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க மத்தியஅரசு உத்தரவிட்டது. அதையடுத்து, தமிழகத்திலும், தேர்ச்சி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்துடன் அரியர் தேர்வுக்கு மாணாக்கர்கள் பணம் கட்டியிருந்தால், அவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்கள் என தமிழகஅரசு உத்தரவிட்டது. ஆனால், தமிழகஅரசின் உத்தரவுக்கு   அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும் எதிர்ப்பு தெரிவித்தோடு, வழக்கும் தொடர்ந்துள்னர்.. வழக்கின் விசாரணையின்போது, அரியர் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளாமல் தேர்ச்சி அறிவிக்கக்கூடாது என ஏஐசிடிஇ தெரிவித்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில்,   சென்னைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின்கீழ்  ஏராளமான கலை அறிவியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த கல்லூரிகளில் பயிலும் அரியா் மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்க சென்னைப் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.  எத்தனை மாணவா்கள் அரியா் வைத்துள்ளனா் என்ற விவரம் கேட்டுப் பெறுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சென்னை பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில்,  சென்னைப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில். அந்த  கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண் வழங்குவது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  அரியா் மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீா்மானத்திற்கு சிண்டிகேட் குழு உறுப்பினா்களின் ஒப்புதல் பெற்ற பின்னா் மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும்.
சென்னைப் பல்கலைக்கழகத்தைப் போல் தமிழகத்தின் ஏனைய பல்கலைக்கழகங்களும் அரியா் மாணவா்களுக்கு தோ்ச்சி வழங்குவதற்கான வழிமுறை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. விரைவில் அரியர் மாணவர்களுக்கு இனிப்பான தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.