மகிழ்ச்சி: சென்னையில் இன்று ஆயிரத்துக்கும் குறைந்தது கொரோனா பாதிப்பு…

சென்னை: கொரோனா உச்சம் பெற்றிருந்த மாநில தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று பரவல் கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், இன்று ஆயிரத்துக்கும் குறைந்ததுள்ளது.

கடந்த 52 நாட்களுக்கு பிறகு இன்று தொற்று பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைந்துள்ளது சென்னை  மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று 984 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொதத எண்ணிகை 1,07,109 ஆக அதிகரித்துள்ளது.

அதே வேளையில் சென்னையில் இன்று மட்டுமே 1103 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.   இதுவரை 93,231  பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலை யில், 11,606 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 24 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,272  பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

சென்னையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பு  1000க்கும் கீழ் பாதிப்பு உறுதி யாகி உள்ளது. கடந்த ஜூன் 16ந்தேதி முதல் ஆயிரத்தை கடந்தபாதிப்பு உறுதியாகி வந்த நிலையில், சுமார் 52 நாட்களுக்கு பிறகு இன்று தொற்று ஆயிரத்துக்கும் குறைந்துள்ளது சென்னை  மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதுபோல தொற்று நோயில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கையும் இன்று வெகுவாக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1103 பேர் குணமடைந்துள்ளதால், தொற்று பாதிப்பை விட, குணமடைந்து வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், சென்னை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கார்ட்டூன் கேலரி