சென்னை:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பீதி அதிகரித்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு கொரோனா கிட் வழங்கி அசத்தியுள்ளார். இது செய்தியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், பேரவை வளாகத்தில் கொரோனா தொற்று பரவாத வகையில், சானிடைசர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று  தலைமைச்செயலகத்தில் உள்ள  சட்டபேரவைக்கு வருகைதந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தலைமைச்செயலகத்தில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு கிருமிநாசினி அடங்கிய கொரோனா தடுப்பு உபகரணங்கள் அடங்கிய சிறிய பெட்டியை வழங்கினார்.

அச்சம் தவிர்ப்போம் – அறிவியலால் வெல்வோம் என்று எழுதப்பட்டிருந்த அந்த சிறு பெட்டியில் கொரோனா முன்னெச்சரிக்கைக்கு தேவையான மருந்து பொருட்கள் அடங்கி உள்ளன.  இதை பெற்றுச்கொண்ட செய்தியளார்கள், ஸ்டாலினுக்கு நன்றி கூறினர்.

செய்திகளை சேகரிக்க ஆங்காங்கே செல்லும் செய்தியாளர்கள், பாதுகாப்பின்றி செல்வதால், அவர்களுக்கு உதவிபுரியும் வகையில் ஸ்டாலின் வழங்கியுள்ள கொரோனா கிட் மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளதாக  செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.