மகிழ்ச்சி: சீமானுக்கு ஆண் குழந்தை..
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு ஆண் வாரிசு பிறந்துள்ளது. இதன் காரணமாக அவர்களது குடும்பத்தனர் மற்றும் கட்சி தொண்டர்களும் உற்சாகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.

2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கும், முன்னாள் சபாநாயகர் மற்றும் அமைச்சர் மறைந்து காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் எளிமையான முறையில் நெடுமாறன் தலைமையில் திருமணம் நடைபெற்றது. அப்போது, ’அ’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட தாலியை கயல்விழி கழுத்தில் சீமான் அணிவித்தார்.
திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்த நிலையில் கடந்த ஆண்டுதான் கயல்விழி கருவுற்றார். தற்போது இந்த தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தாயும் மகனும் நலமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
குழந்தை பிறந்துள்ள சீமான் குடும்பத்தினர், காளிமுத்து குடும்பத்தினர் உற்சாகமாக இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள். கட்சி தொண்டர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
