ஈஸ்டர் திருநாளில் 93 வது பிறந்த நாளை கொண்டாடிய இரண்டாவது ராணி எலிசபெத்

லண்டன்:

ஈஸ்டர் திருநாளில் 93-து பிறந்தநாளை இரண்டாவது ராணி எலிசபெத் கொண்டாடினார்.


எலிசபெத் அலெக்சாந்திரா மேரி என்ற இரண்டாம் எலிசபெத் 1926- ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ந்தேதி பிறந்தார். இவர் ஐக்கிய இராஜ்யம் உள்பட 16 நாடுகளின் அரசியல் சட்டப்படியான அரசியாக உள்ளார்.

அனைத்து நாடுகளுக்கும் இவர் தனித்தனியே வெவ்வேறு பெயர்களில் ஆட்சிப் பெயர்களைக் கொண்டிருந்தாலும், ஐக்கிய இராஜ்ஜியத்திலேயே, லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் இவர் வாழ்கிறார்.

54 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த் அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார். இங்கிலாந்து திருச்சபையின் மிக உயரிய ஆளுநர் ஆவார்.

61 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் இவர், பிரிட்டன் அரசர்களிலேயே நெடுங்காலம் ஆட்சி புரிந்தவர்களில் இரண்டாமவராக ளங்குகிறார்.
விக்டோரியா மகாராணியார் மட்டுமே இவரைவிட நீண்டகாலமாக 63 ஆண்டுகள் ஆண்டுள்ளார்.

எலிசபெத் லண்டனில் பிறந்து வீட்டிலேயே கல்வி கற்றார். இவரது தந்தை தமது தமையன் எட்டாம் எட்வர்டின் முடிதுறப்பிற்குப் பின்னர் ஐக்கிய இராஜ்யத்தின் ஆறாம் ஜார்ஜ் 1936-ம் ஆண்டில் மணிமகுடம் சூடினார். அப்போது முதலே இவர் அரச வாரிசாக இருந்து வருகிறார்.

இரண்டாம் உலகப் போரின்போது பொதுச்சேவைகளில் ஈடுபட்டார். 1947-ல் எலிசபெத் எடின்பரோ கோமகன் பிலிப்பை மணந்தார். இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். சார்லஸ், ஆன், ஆண்ட்ரூ, மற்றும் எட்வர்டு. இவர்கள் மூலமாக எட்டு பேரப் பிள்ளைகளும் உள்ளனர்.

இவரது முடி சூட்டும் விழா 1953-ம் ஆண்டு நிகழ்ந்தபோது அதுவே உலகில் முதன்முதலாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட பெருமை பெற்றது.

93-வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் அவருக்கு குடும்பத்தாரும், மக்களும் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.