’ ஹேப்பி ஹாலிடேஸ் ‘ கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன கூகுள் டூடுள்!

இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25ம் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையான கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏசு பிறந்ததை உலகில் உள்ள அனைத்து கிறிஸ்துவர்களும் கொண்டாடி வருகிறது. அதன்படி இன்றும் கிறிஸ்துமஸ் பண்டிக்கை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூகுள் நிறுவனம் சிறப்பான டூடுளை வெளியிட்டு பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையை குறிக்கும் விதமாக ‘ ஹேப்பி ஹாலிடேஸ் ‘ என்ற அனிமேஷன் டூடுளை கூகுள் வெளியிட்டுள்ளது.

அந்த டூடுளில் கிறிஸ்துமஸ் பொருட்களுடன் சாண்டா காத்திருப்பது போன்ற அனிமேஷன் கூகுள் டூடுளில் இடம்பெற்றுள்ளது.