ஷங்கர் – கமல் கூட்டணியில் உருவாகும் இந்தியன்-2 படப்பிடிப்பு தொடக்கம்!

பிரபல இயங்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியன்-2க்கு இணைய தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இசை அமைப்பாளர் அனிருத்தும் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஹேப்பி இந்தியன்2 டே  என்று சமூக வலைதளத்தில் சில படங்களுடன் பதிவிட்டு உள்ளார்.

இந்தியன்2 படப்பிடிப்பு வரும் 18-ம் தொடங்கும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இன்று படத்தின் பூஜைகள் நடைபெற்று படப்புடிப்பு தொடங்கியது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தியன் 2 தயாராக உள்ளது. கமலுக்கு ஜோடி யாக காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனார். இந்தியன்-2க்கு  அனிருத் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். படத்தை பிரபல படத்தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனார். ஏற்கனவே சிம்பு நடிப்பதாக இருந்த நிலையில், அவர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த கேரக்டரில் நடிகர் சித்தார்த் நடிக்கிறார். அவருக்கு போலீஸ் அதிகாரி வேடம் என்று தகவல் வெளியாகி உள்ளது.  தனது தந்தையின் மரணத்திற்கு பழிவாங்குவதற்கு சேனாபதியின் பேரனாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

படத்தின் படப்பிடிப்பு,   சென்னை மற்றும் ஹைதராபாத் தவிர, தைவான் மற்றும் உக்ரேன் போன்ற இடங்களில் நடத்த இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: actor siddarth, anirudh, director shankar, Happy Indian2 Day, kamalhaasan, LycaProductions, Senapathy firstlook, அனிருத், இந்தியன் 2, இயக்குனர் சங்கர், கமல்ஹாசன், நடிகர் சித்தார்த்!, படப்பிடிப்பு தொடக்கம், மக்கள் நீதி மய்யம்
-=-