வண்ணமயமான வான வேடிக்கைகளுடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற நியூசிலாந்து, ஆஸ்திரேலிய மக்கள்!

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மக்கள் வண்ணமயமான வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.

Australia

உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடான நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இந்திய நேரப்படி 4.30 மணியளவில் 2019ம் ஆண்டு கோலாகலமாக பிறந்தது. புதிதாக பிறந்த இந்த ஆண்டை வரவேற்கும் விதமாக நியூசிலாந்திலும், ஆஸ்திரேலியாவின் சிட்னியிலும் மக்கள் ஒன்றுக்கூடினர்.

சரியான நேரத்தில் புத்தாண்டு பிறந்ததும் வானளவு உயர்ந்த வண்ண வண்ண வான வேடிக்கைகள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றன. அதுமட்டுமின்றி, மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். வண்ண வண்ண வான வேடிக்கைகளில் அப்பகுதி முழுவதுமே அழக்காக காட்சி அளித்தது. அதே போன்று, ஜப்பானில் இந்திய நேரப்படி 8.30 மணியளவில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள இந்திய கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் சிட்னியில் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார். அதுமட்டுமின்றி, அனைவருக்கும் விராட் கோலி புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.