7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி! செங்கோட்டையன்

ஈரோடு: 7.5 இடஒதுக்கீடு குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி வரும் என தெரிவித்த அமைச்சர், செங்கோட்டையன்இன்று 7.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பும்  எதிர்க்கட்சிகள் யாரும் இடஒதுக்கீடு கேட்கவில்லை,  “7.5% இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றியது அதிமுக அரசுதான்”  என்றார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அங்கு பயனர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியதுடன், பல அரசு நலத்திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், எதிர்க்கட்சிகள் இன்று 7.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனார். ஆனால் அவர்கள் யாரும் இடஒதுக்கீடு கேட்கவில்லை. அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயிலும் வகையில்,  உள் இடஒதுக்கீடு வழங்க முயற்சி மேற்கொண்டு அதற்கான  சட்டம் இயற்றியது அதிமுக அரசுதான், இதை  சுட்டிக்காட்ட விரும்புவதாக கூறிய அவர், இந்த விவகாரம் குறித்து விரைவில் மகிழ்ச்சியான செய்தி வரும் என்று நம்பிக்கை  தெரிவித்தார்.