‘’மகிழ்ச்சி”: பேச்சுவார்த்தை குறித்து ஓ.பன்னீர்செல்வம்

சென்னை,

 இரு அணிகளும்  இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் மகிழ்ச்சி என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

அதிமுகவில் தற்போது  ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக இரட்டை இலை முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரட்டை இலை மீட்க இரு அணிகளும் இணைவது அவசியம் என ஒருசில மூத்த தலைவர்கள் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

தற்போது இரு அணிகளும் இணைவது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனது சொந்த ஊருக்குவந்துள்ள ஓபிஎஸ், சிருங்கேரி சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்றார்.

அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் கூறியதாவது,

”அ.தி.மு.க இணைவது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. சசிகலா தரப்பில் ஒரு குழு அமைத்துள்ளதாக கேள்விப்பட்டேன். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினால் இணைந்து செயல்படுவது பற்றி முடிவெடுப்போம்”, இதில் தனக்கு மகிழ்ச்சியே என்றும் அவர் கூறினார்.

ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த, சசிகலா அணியினர் 2 எம்.பிக்கள் உடன்  7 அமைச்சர்களுடன் இணைந்த 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.