சென்னை:

லோக்சபா தேர்தலில் கடலூர் தொகுதி வேட்பாளராக மநீம சார்பில் அறிவிக்கப்பட்ட கெவின்கேர் குமரவேல் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், தற்போது மீண்டும், கமல் ஹாசன் கட்சியில் இணைந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிகர் கமல்ஹானின்  மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்த பிரபலமானவர்களில் ஒருவர்  கெவின்கேர் குழுமத்தை சேர்ந்த குமரவேல்.  இவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் உடன் வியாபார ரீதியாக தொடர்பில் உள்ளவர்.

இவருக்கு கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மற்றும் கடலூர், நாகை மண்டல பொறுப்பாளர் பதவி வழங்கி கவுரவித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, குமரவேலை கமல்ஹாசன் கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவித்தார். ஆனால், அவர் திடீரென  கட்சியில் இருந்து விலகுவதாக கடிதம் அனுப்பிவிட்டு எஸ்கேப்பானர். அப்போது கட்சி தலைமைமீது கடுமையான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி இருந்தார்.

அவரது விலகளுக்கு காரணமாக, கெவின்கேர் நிறுவனத்தில், கருணாநிதி வாரிசு ஒருவர் பங்குதார ராக இருந்து வருவதாகவும், திமுகவின் மிரட்டல்காரணமாகவே அவர் விலகியதாக தகவல்கள் பரவியது.

இந்த நிலையில் குமரவேல் மநீம தலைவர் கமல்ஹாசனை சந்திதது மீண்டும் கட்சியில் இணைந்துள்ளார். அவரை கமல்ஹாசன் இன்முகத்துடன் வரவேற்றார்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள குமரவேல், ஒரு சாலையின் முடிவாகத் தோன்றுவது உண்மையில் சாலையில் ஒரு வளைவாக இருக்கலாம். வீடு திரும்பியதில் மகிழ்ச்சி என்று கூறி உள்ளர்.