மகிழ்ச்சி: திருநங்கை தாரிகா பானு +2 தேர்ச்சி! மருத்துவராக விருப்பம்!!

சென்னை,

ன்று வெளியிடப்பட்டுள்ள பிளஸ்-2 தேர்வு முடிவில் சென்னையை சேர்ந்த திருநங்கை ஒருவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மொத்தத்தில் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இந்த ஆண்டு 92.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சென்னை  அம்பத்தூரில் உள்ள  பெருந்தலைவர் காமராஜர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற திருநங்கையான தாரிகா பானு  +2 பொதுத் தேர்வில் 537 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் பிளஸ்2 எழுதிய ஒரே திருநங்கையான  பானு தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாணு செய்தியாளர்களிடம் கூறியதாவது,

என்னை எந்தவொரு பள்ளியும் சேர்க்கவில்லை.  தான்  பள்ளியில் சேர பல்வேறு போராட்டம் நடத்திதான் சேர்ந்தேன் என்று கூறினார். தற்போது தான் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், என்னை படிக்க வைக்க  துணை புரிந்த அனைவருக்கும்  நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.

மேலும், தான் மருத்துவருக்கு படிக்க விரும்புவதாகவும், திருநங்கை சமுதாயத்திலிருந்து வருவோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.