தருமபுரி மாணவிக்கு நடந்த  கொடூரம்! மக்கள்  போராட்டம்

லாத்காரம் செய்யப்பட்ட மாணவி மரணமடைந்ததை அடுத்து ஊர்பொதுமக்கள் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமம் ஒன்றைச் சேர்ந்த மாணவி அருகில் உள்ள அரசுப்பள்ளி விடுதியில் தங்கி  பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்காக தனது வீட்டுக்கு வந்தார்.  கடந்த ஐந்தாம் தேதி இயற்கை உபாதைக்காக அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச்  சென்ற அவரை,  அதே ஊரைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் ஆகியோர் பின்தொடர்ந்து சென்று, அருகில் இருந்த ஓடக்கரைக்கு தூக்கிச் சென்றனர்.

. மாணவியின் வாயில் துணியை வைத்து அடைத்த இருவரும் அவரை பலாத்காரப்படுத்த முயன்றனர். இதில் மாணவிக்கு படுகாயம் ஏற்பட்டது.

மாணவிக்கு நடந்த கொடுமை குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவி அரசு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டு, பிறகு  தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி மரணமடைந்தார்.

இந்த நிலையில் ஊர் மக்கள், மாணவிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அலிக்காததே, அவர் மரணமடைய காரணம் என்று குற்றம்சாட்டி இரவு முழுதும் சாலையில் போராட்டம் நடத்தினர்.

பொதுமக்கள் அனைவரும் சாலையிலேயே அங்கேயே உணவு சமைத்து, சாப்பிட்டனர். இரவு முழுவதும் போராட்டம் நீடித்தது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

மாணவியை பலாத்காரப்படுத்த முயன்று மரணத்துக்குக் காரணமான இருவரும் அவருக்கு சகோதரர் உறவு முறைகொண்ட உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.