விஜய் ரசிகருடன் ட்விட்டரில் சண்டை போட்டு கொண்டிருக்கும் ஆர்த்தி…!

சில தினங்களுக்கு முன்பு நடிகை ஆர்த்தி தனது கணவருடன் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார். சத்தமா சிரிச்சுடுங்க… Come-on.. Bore அடிக்கிறவங்க கலாய்கலாம் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது விஜய் ரசிகர் ஒருவர் ஆர்த்தியை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். அதற்கு ஆர்த்தி

“தம்பி என்ன வேனா சொல்லுபா அது உன் தரம்… ஆனா உன்புகைப்படத்துடன் உன் உண்மையான பெயருடன் சொல் அதுதான் ஆண்மகனுக்கழகு… நம்ம தளபதியும் @actorvijay யும் அதைத்தான் விரும்புவார்…இல்லையேனில் பெளர்ணமி நிலவைப்பார்த்து ஏதோ குளைக்கிறது என்றாகும்..” என ஆர்த்தி பதில் அளித்துள்ளார்.

https://twitter.com/harathi_hahaha/status/1257372530190553099

“இந்த மாதிரி ஒரு சில களைகளை பிடுங்கி எறிந்து விட்டால் மற்ற ரசிக சகோதர சகோதரிகள் தளபதி @actorvijay யின் கோட்டைக்கு தூண்களே… உண்மையிலேயே தளபதி தமிழகத்தின் செல்லபிள்ளையே… இவர்கள் அவர் பெயர் கெடுக்காமல் இருப்பின்” என மற்றொரு ட்விட்டில் ஆர்த்தி கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி