எங்களையும் அனுமதியுங்களேன் – ஹர்பஜன்சிங் வைக்கும் கோரிக்கை என்ன?

--

சண்டிகர்: இந்திய வீரர்களை வேறுநாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளில் பிசிசிஐ ஆட அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளார் ஹர்பஜன் சிங்.

அவர் கூறியுள்ளதாவது, “பிற நாட்டு கிரிக்கெட் வீரர்கள், ஐபிஎல் தொடர்களில் ஆடுகின்றனர். எனவே, இந்திய வீரர்களும் வெளிநாட்டு லீக் தொடர்களில் பங்கேற்க அனுமதிக்கப்பட வ‍ேண்டும்.

இதன்பொருட்டு, விரும்பும் வீரர்கள் விண்ணப்பித்து அனுமதி பெறுகின்ற வகையில் தனியான விதிமுறைகளை ஐசிசி வகுக்க வேண்டும். இந்திய அணிக்கான ஒப்பந்தத்தில் இல்லாத, இனிமேல் அணியில் தேர்வுசெய்யப்பட வாய்ப்பில்லை என்ற நிலையில் உள்ள, 50 டெஸ்ட்களில் விளையாடிய அனுபவம் உள்ள மற்றும் 35 வயதான வீரர்கள் விண்ணப்பித்து அனுமதி பெற வழிவகை செய்ய வேண்டும்” என்றுள்ளார்.

இர்ஃபான் பதான், இந்திய அணியில் தனது இடத்தை இழந்து அதிக நாட்கள் ஆகிறது. இதற்கு முன்பாக, இதேபோன்றதொரு கோரிக்கையை முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் இர்ஃபான் பதான் ஆகியோர் முன்வைத்தனர் என்பது நினைவில் இருக்கலாம்.

ஆனால், இப்படியான கோரிக்கைகள் எழுகின்றபோதும், ஐபிஎல் தொடருக்கான ஏகபோகம் இதனால் குறைந்துவிடும் என்ற எண்ணம் பிசிசிஐ அமைப்பிற்கு இருப்பதால், அனுமதி கிடைக்காது என்றே தெரிகிறது.