சந்திரயான் வெற்றி : அர்பஜன் சிங் அளித்த அருமையான டிவிட்

டில்லி

ந்திராயன் வெற்றிகரமாக ஏவப்பட்டது குறித்து கிரிக்கெட் வீரர் அர்பஜன் சிங் டிவிட் வெளியிட்டுள்ளார்.

நேற்று மதியம் சந்திரயான் 2 விண்கலம் வெற்றிகரமாக வானில் ஏவப்பட்டது.  தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

பிரபல கிரிக்கெட் வீரரான அர்பஜன் சிங் தனது டிவிட்டரில் புதுமையாக பதிவிட்டு இந்தியாவை பாராட்டி உள்ளார்.

அவர் தனது டிவிட்டரில், “பல நாடுகள் நிலவை தனது கொடியில் வைத்துள்ளன.  ஒரு சில நாடுகள் மட்டுமே நிலவில் தங்கள் கொடிகளை நாட்டி உள்ளன” என புதுமையாக புகழாரம் சூட்டி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி