கிரிக்கெட் வீரர் அர்பஜன் சிங் தமிழில் புத்தாண்டு வாழ்த்து

சென்னை

கிரிக்கெட் வீரர்  அர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் புத்தாண்டு வாழ்த்து பதிந்துள்ளார்.

பிரபல சுழல் பந்து வீச்சாள அர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது விளையாடி வருகிறார்.   தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி தமிழில் பதிவுகளை இவர் பதிந்து வருகிறார்..   தமிழ் ரசிகர்களிடையே அவருடைய தமிழ் பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி ஒன்றை அர்பஜன் சிங் தமிழில் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.

அதில், “தமிழா.  இது உன்னுடைய புத்தாண்டு.  சோகங்கள், துன்பங்கள் அனைத்தும் மறைந்து புதிய பாதை பிறக்கும்.   புது விடியல் பார்க்கக் காத்திருக்கும் விழிகளுக்கு நன்மை வந்து சேரட்டும்.  உலக நாகரிகத்துக்கு எல்லாம் வித்திட்ட தமிழ்மொழியை தாய் மொழியாகக் கொண்ட என் தோழமை இனத்துக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்” என பதிந்துள்ளார்.

இந்த பதிவுக்கு பெருமளவில் தமிழ் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Harbhajan singh posted tamil greetings in his twitter
-=-