சஞ்சு சாம்சனை கைவிட்டதற்காகத் தேர்வாளர்களைக் குற்றம் சாட்டிய ஹர்பஜன் சிங்!

புதுடில்லி: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடக்கவிருக்கும் தொடருக்கான அணியில் இருந்து விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை அணியில் இருந்து நீக்கியதற்காக மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழுவை குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வதேச டி20 (T20I) மற்றும் ஒருநாள் அணிகள் அறிவிக்கப்பட்ட பின்னர், திருவனந்தபுரம் பாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூர், இவ்வாறு ட்வீட் செய்துள்ளார், “சஞ்சு சாம்சன் ஒரு வாய்ப்பு இல்லாமல் கைவிடப்பட்டதைக் கண்டு மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். சோதனை அவரது பேட்டிங் திறமைக்கா அல்லது அவரது இதயத்திற்கா?“.

இந்த  ட்வீட்டுக்கு பதிலளித்த ஹர்பஜன் இவ்வாறு எழுதினார்: “அவர்கள் அவரது இதயத்தை சோதித்துப் பார்க்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.“ “இப்போது அணியில் வலுவான ஆட்கள் தேவை,  தாதா அதற்கு ஆவன செய்வார் என்று நம்புகிறேன்.“

விஜய் ஹசாரே டிராபி போட்டியில் இரட்டைச் சதம் அடித்தது உட்பட உள்நாட்டு சுற்றுவட்டத்தில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தின் அடிப்படையில் சஞ்சு சாம்சன் வங்கதேசத்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடருக்காக இந்திய அணிக்கு அழைக்கப்பட்டார்.

இருப்பினும், எந்தவொரு போட்டியிலும் அவருக்கு ஒரு தொடக்கமும் வழங்கப்படவில்லை, பின்னர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் அவர் கைவிடப்பட்டுள்ளார்.