ஹர்பஜன் சிங் பிறந்த நாள் – தமிழில் வாழ்த்து தெரிவித்த சச்சின்

இந்திய சுழல் பந்து வீசாளர் ஹர்பஜன் சிங்கிற்கு சச்சின் டெண்டுல்கர் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இந்தியாவின் தவிர்க்க முடியாத சுழல்பந்து வீசாளரான ஹர்பஜன் சிங்கின் தனது 38வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
sachin
டி20 உலக கோப்பை, ஒரு நாள் உலக கோப்பை போட்டிகளில் ஹர்பஜன் சிங் பங்கு பாராட்டும் படியாக இருந்து வந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த 11வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங் இடம்பெற்றிருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்ததில் இருந்து தமிழர்கள் மீதும் தமிழ் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக ஹர்பஜன் சிங் மாறி வருகிறார்.

அவ்வபோது நடக்கும் நிகழ்வுகளுக்கு ஹர்பஜன் சிங் டிவிட்டரில் தமிழில் கருத்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில் கிரிக்கெட் உலகின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என்று புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் ஹர்பஜன் சிங்கிற்கு தமிழில் வாழ்த்து செய்தி அனுப்பி அசத்தியுள்ளார்.

சச்சின் தனது டிவிட்டர் பதிவில், “ விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, @harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ஹர்பஜன் சிங் மற்றும் தமிழ் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.