‘கண்கள் கலங்க விடைபெறுகிறேன்…..’ தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து ஹர்பஜன் சிங் டிவிட்

சென்னை:

மிழக மக்கள் மற்றும் ஐபிஎல் சென்னை ரசிகர்கள் அனைவரும்  நன்றி தெரிவித்துள்ள சிஎஸ்கே வீரரான ஹர்பஜன் சிங் ‘கண்கள் கலங்க விடைபெறுகிறேன்’ என  டிவிட் செய்து தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி கைப்பற்றும் என மிகுந்த எதிர்பார்ப்பில் சிஎஸ்கே ரசிகர்கள் திளைத்திருந்த நிலையில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழக மக்கள் மற்றும் சென்னை ரசிகர்களுக்கு ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

அதில்,  தமிழ் மக்கள் மற்றும் @ChennaiIPL ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், எதோ தங்கள் இல்லங்களில் ஒருவன் போல, அரவணைத்து அன்புசெலுத்திய உறவுகளின் இப்பண்பு, என்னை நெகிழ செய்தது.மீண்டும் அடுத்த வருடமும் #CSK வுக்கு விளயாடுவேன் என்றே நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜனின் டிவிட் வைரலாகி வருகிறது.

கார்ட்டூன் கேலரி