”ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள்” – பிசிசிஐ

தனியார் தொலைக்காட்சியில் அத்துமீறி பேசியதால் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

hardik

பிரபலங்கள் பங்கேற்கும் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவும் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து தவறான கருத்துக்கள் கூறினார். இதையடுத்து ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்தனர்.

இது பெரும் சா்ச்சையாக ஏற்படுத்தியது. தவிர, சச்சின் மற்றும் விராட் கோலி இவா்களில் யாா் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்விக்கு இருவரும் விராட் கோலி என பதில் அளித்தனா். இதனால் ஆத்திரமடைந்த ரசிகா்கள், சச்சின், தோனியை விட விராட் கோலி சிறந்தவர் இல்லை என டுவிட்டரில் கருத்துகளை தொிவித்து வந்தனா்.

இதையடுத்து ஹா்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பாண்டியா வெளியிட்ட பதிவில், “ யாரையும் அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை. யாரையாவது காயப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் ” என குறிப்பிட்டிருந்தாா். இதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய ஹர்திக் பாண்டியாவும், அவருடன் சென்ற கே.எல்.ராகுலும் 24மணி நேரத்தில் விளக்கம் அளிக்க கேட்டு பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதன்பிறகு இருவரும் தங்கள் தரப்பு விளக்கத்தை பிசிசிஐ யிடம் அளித்தனர். ஆனால் அவர்களின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில் அதன் தலைவர் வினோத் ராய் “ தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர்களுக்கு யார் அனுமதி அளித்தது ? என்றும், அவர்களுகு 2ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்க வேண்டுமெனவும் “ தெரிவித்தார்.

இதையடுத்து சர்ச்சை கருத்து தெரிவித்த ஹர்திக் பாண்டியா முதல் ஒருநாள் போட்டியில் விளையாட மாட்டார் என்றும், கே.எல்.ராகுல் முதல் ஒருநாள் போட்டிக்கான தேர்வில் கருதப்படமாட்டார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.