தோனிக்கு வித்யாசமான பரிசு அளித்த ஹர்திக் பாண்டியா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா வித்யாசமான பிறந்த நாள் பரிசு ஒன்றை அளித்துள்ளார். அந்த பரிசு தோனி ரசிகர்களிடையே சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. ஜூலை 7ம் தேதி மகேந்திர சிங் தோனி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவர் மனைவி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் பரிசுக்களை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் தோனிக்கு ஹர்திக் பாண்டியா அளித்த பரிசு வித்யாசமானதாக இருந்தது.
Hardik
அடிக்கடி தனது ஹேர்ஸ்டைலில் வித்யாசத்தை விரும்பு ஹர்திக் பாண்டியா, தோனிக்கு ஹேர் ஸ்டைலிஸ்டாக மாறியுள்ளார். தோனிக்கு முடி வெட்டிவிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஹர்திக் பாண்டியா “ஸ்பெஷ்லான நாளில் ஸ்பெஷல் ஹேர்கர். தோனியின் பிறந்தநாளுக்கு என்னுடைய பரிசு. இது எக்ஸ்பெர்ட்டால் செய்யப்பட்ட சாகசம் இதை யாரும் வீட்டில் முயற்சிக்க வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாண்டியாவின் இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள தோனியின் பதிவில் ” ஹர்திக் நான் சொல்வது உனக்கு புரியும் என்று நினைக்கிறேன். இங்க நான் தான் எக்ஸ்பர்ட். எல்லாத்தையும் இழந்த்தது நான் தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.