Random image

முடிவுக்கு வந்தது ஹர்திக் பட்டேலின் 19 நாள் உண்ணாவிரதம்

அகமதாபாத்:

ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்த ஹர்திக் பட்டேல்  உண்ணாவிரதம்  19வது நாளை எட்டிய நிலையில் இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

பட்டேல் இனத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிய ஒதுக்கீடு  கோரியும்,  அவர்கள் பெற்றுள்ள வங்கி கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் கடந்த மாதம் (ஆகஸ்டு) 25-ம் தேதி முதல் படிதார் அனாமத் அந்தோலன் சமீதி தலைவர்  ஹர்திக் பட்டேல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார்.

கடந்த 7-ந் தேதி, அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 9ந்தேதி  வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வீட்டிலும்  தொடர்ந்து உண்ணா விரதம் இருந்து வந்தார். அவர் உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எச்.ராஜா உள்பட ஏராளமானோர் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஹர்திக் பட்டேல் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். அதன்படி 10வது நாளான இன்று  இன்று இளநீர் அருந்தி தனது உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார்.

இட ஒதுக்கீடு போராட்டத்தை வென்றெடுக்க நீங்கள் உயிருடன் வாழ வேண்டும் என்று அவரது நண்பர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற முடிவை ஹர்திக் மாற்றிகொண்டதாக கூறப்படுகிறது.