ஹர்திக்  படேல் தேர்தலில் போட்டியிட முடியாது : நீதிமன்றம் தீர்ப்பு

கமதாபாத்

ரு கலவர வழக்கில் தண்டனை பெற்றுள்ளதால் காங்கிரஸ் வேட்பாளர் ஹர்திக் படேல் தேர்தலில் போட்டியிட குஜராத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குஜராத் மாநில படேல் இன தலைவர் ஹர்திக் படேல் கடந்த 2015 ஆம் வருடம் படேல் இனத்தவருக்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.  அந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரம் ஏற்பட்டது.  அதை ஒட்டி மேசான நிதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்தது.

தற்போது காங்கிரசில் இணைந்துள்ள ஹர்திக் படேல் அக்கட்சியின் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளார்.   அவருக்கு மேசானா நிதிமன்றம்  அளித்துள்ள தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்குமாறு அவர் குஜராத் உயர்நீதிமன்றத்ஹ்டுக்கு மனு அளித்தார்.

அந்த மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் ஹர்திக் படேல் தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ளது.   மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 இன் படி அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட தடை விதித்துள்ளது.

You may have missed