கமதாபாத்

டேல் இன தலைவர் ஹர்திக் படேல் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலத்தில் படேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு கோரி ஹர்திக் படேல் போராட்டம் நடத்தி வருகிறார். தற்போது குஜராத் அரசியலில் புகழ்பெற்று வரும் அல்பேஷ் தாக்குர் மற்றும் ஜிக்னேஷ் மேவானி போன்ற இளம் தலைவர்கள் வரிசையில் ஹர்திக் படேலும் இடம் பெற்றுள்ளார். கடந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் இந்த இளம் தலைவர்கள் போட்டியிட விரும்புகின்றனர். இம்மூவரில் ஜிக்னேஷ் மேவானி ஏற்கனவே சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். அல்பேஷ் தாக்குர் காங்கிரசில் ஏற்கனவே இணைந்து விட்டார். ஹர்திக் படேல் ஜாம்நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட விரும்புகிறார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நேரடியாக போட்டியிடும் என அறிவித்துள்ளது. எனவே காங்கிரஸ் கட்சி சுயேச்சை வேட்பாளராக ஹர்திக் படேல் போட்டியிட்டால் ஆதரவு அளிக்காது என தெரிய வந்துள்ளது. ஆகையால் ஹர்திக் படேல் காங்கிரசில் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாதம் 12 ஆம் தேதி குஜராத் மாநிலத்துக்கு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஹர்திக் படேல் காங்கிரசில் இணைவார் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து ஹர்திக் படேல் கருத்து எதுவும் சொல்ல மறுத்துள்ளார்.