Random image

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஹர்திக் பட்டேல் தொடர்ந்து உண்ணாவிரதம்

அகமதாபாத்:

டஒதுக்கீடு கோரி  உண்ணாவிரதம் இருந்துவரும்  படிதார் அனாமத் அந்தோலன் சமீதி தலைவர்  ஹர்திக் பட்டேல் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது வீடு திரும்பிய நிலையிலும்  தொடர்ந்து  உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

படிதார் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கடந்த 15 நாட்களுக்கும் மேலாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக அவரது உடல்நிலை மோசடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குளுக்கோஸ் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து உடல்நிலை தேறிய நிலையில் வீடு திரும்பிய உண்ணாவிரத்தை தொடர்கிறார்.

குஜாரத்தில் உள்ள படேல் இனத்தை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இணைக்க கோரியும், அவர்கள் பெற்றுள்ள வங்கி கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும் கடந்த மாதம் (ஆகஸ்டு) 25-ம் தேதிமுதல்  படிதார் அனாமத் அந்தோலன் சமீதி தலைவர்  ஹர்திக் பட்டேர் இருந்து வருகிறார்.

கடந்த 7-ந் தேதி, அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று பிற்பகல்  அவர் ஆஸ்பத்திரியில் இருந்து நேராக அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வீட்டிலும்  தொடர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக பரபரப்பு நிலவுகிறது.

ஹர்திக் பட்டேலின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவரது வீட்டுக்கு செல்ல முயன்ற பத்திரிகையாளர்களை போலீசார் விரட்டி வருகின்றனர்.