போராடுவது எனது உரிமை….குஜராத் முதல்வருக்கு ஹர்திக் படேல் கடிதம்

காந்திநகர்:

பட்டிதார் இன மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி குஜராத் மாநிலத்தில் ஹர்திக் படேல் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளார். இந்த வகையில் அகமதாபாத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க ஹர்திக் படேல் முடிவு செய்தார். இதற்காக நிகோல் நகரில் இடம் ஒதுக்கீடு செய்து வழங்க கோரி ஹர்திக் படேல் மனு அளித்தார்.

ஆனால், இடம் ஒதுக்கீடு செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குஜராத் முதல்வர் விஜய் ரூபனிக்கு ஹர்திக்படேல் கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,’’உண்ணாவிரத போராட்டம் நடத்துவது எனது அரசியலமைப்பு உரிமை. இதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார். ஹர்திக்டேலுக்கு ஆதரவாக இதர ஆர்வலர்களும் கைகோர்க்க முடிவு செய்துள்ளனர்.