ஜெனிவா: ‘செஸ்960’ எனப்படும் பயிற்சி செஸ் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார் ஹரிகிருஷ்ணா.
கிராண்ட் மாஸ்டர் டிரையத்லான் என்றழைக்கப்படும் செஸ் தொடர், சுவிட்சர்லாந்தில் நடைபெறுகிறது. இத்தொடரில், ஹரிகிருஷ்ணா உள்ளிட்ட மொத்தம் 8 பேர் பங்கேற்கின்றனர். இத்தொடரில், ரேபிட், பிளிட்ஸ் மற்றும் கிளாசிக் என்ற 3 பிரிவுகள் உள்ளன.
இத்தொடருக்கு தயாராகும் விதமாக, ‘செஸ்960’ என்ற பெயரில் பயிற்சி போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டி ‘ரவுண்ட் ராபின்’ முறையில் நடத்தப்பட்டது. மொத்தம் 7 சுற்றுகள் இடம்பெற்றிருந்தன. இதில், முதல் சுற்றில் இங்கிலாந்து வீரருடன் டிரா செய்த ஹரிகிருஷ்ணா, அடுத்த 2 சுற்றுகளில் ஜெர்மனி மற்றும் சுவிஸ் வீரர்களை வென்றார்.
இதன்படி, மொத்தமாக, 4 வெற்றி மற்றும் 3 டிரா என்று 5.5 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார் ஹரிகிருஷ்ணா.