கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதத் துக்கும் மேலாக திரை அரங்குகள் மூடப் பட்டிருக்கின்றன. விஜய் நடித்த மாஸ்டர், சூர்யா நடித்த சூரரைப்போற்று, தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் போன்ற பல படங்கள் முற்றிலும் முடிந்து திரைக்கு வர தயாராக இருந்தன. தியேட்டர் திறக்கும் அறிகுறியே இல்லை  இந்த ஆண்டில் தியேட்டர்கள் திறக்கப்படுமா என்ற  பலர் படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தனர்.
பொன் மகள் வந்தாள்,  பெண்குயின், காக்டெயில் ஆகிய படங்கள் ஒடிடியில் ரிலீஸ் ஆகியது தற்போது சூர்யாவின் சூரரைப் படமும் ஒடிடியில் ரிலீஸ் ஆகிறது வரும் அக்டோபர் 30ல் இப்படம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது., இதனை சூர்யாவே அறிவித்தார்.  இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
சூர்யா நடித்த சூப்பர் ஹிட்டான சிங்கம் பட இயக்குனர் ஹரி, சூர்யா தனது சூரரைப்போற்று படத்தை ஒடிடியில் வெளியிட எடுத்த முடிவை மறு பரிசிலனை செய்யக் கேட்டிருக்கிறார்.

இதுபற்றி ஹரி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது
மதிப்பிற்குரிய சூர்யா அவர்களுக்கு உங்களுடன் சேர்ந்து தொடர்ந்து வேலை செய்த உரிமையில் சில விஷயங்கள் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு ரசிகனாக உங்கள் படத்தை தியேட்டரில் பார்ப்பதில் தான் எனக்கு மகிழ்ச்சி. ஓடிடியில் பார்ப்பதில் அல்ல. நாம் சேர்ந்து செய்த படங்களுக்கு தியேட்டரில் ரசிகர்களால் கிடைத்த கை தட்டல்கள்தான் நாம் இந்த உயரத்தில் இருக்கிறோம். அதை மறந்து விட வேண்டாம்.
சினிமா எனும் தொழில் நமக்கு தெய்வம். தெய்வம் எங்கு வேண்டுமென்றாலும் இருக்கலாம். ஆனால் தியேட்டர் என்கின்ற கோவிலில் இருந்தால்தான் அதற்கு மரியாதை. படைப்பாளிகளின் கற்பனைக் கும் உழைப்புக்கும் ஒரு அங்கீகாரம். தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவன் நான். இருப்பினும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்தால் சினிமா இருக்கும் வரை உங்கள் பெயரும் புகழும் நிலைத்து நிற்கும்.
இவ்வாறு இயக்குனர் ஹரி கூறி உள்ளார்.

ஏற்கனவே தியேட்டர் அதிபர் சங்க நிர்வாகி திருப்பூர் சுப்பரமணியம், ’சூர்யா தனது படத்தை ஒடிடியில் வெளியிட எடுத்த முடிவு திரை அரங்குகளை நிரந்தரமாக மூட வழிவகுக்கும்’ என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.